Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் உயிரிழப்பு

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் உயிரிழப்பு

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் இன்றையதினம் அதிகாலை 2.00 மணியளவில் மூச்செடுப்பதற்கு
சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய நிலையில், நோயாளர் காவு வண்டியில் அங்கு வந்தவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளாதாக தெரிவித்து திரும்பி சென்றனர்.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments