Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு
மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக
தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டு இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தற்போது நிலவும் கடுமையான மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக
சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே,  மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக
தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

காலநிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்பதை
அறியத் தருகிறோம். குறிப்பாக நாளை யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப்
பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது,  இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை
அனுப்பி மருந்துகளைப் பெற முடியும்.

மேலதிக தகவல்கள் தேவையெனில்,வைத்தியசாலை அனர்த்த முகாம் பிரிவை
தொடர்பு கொள்ளலாம்.அதன்படி 070 1222261 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments