Thursday, July 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் : தூண் மற்றும் வேலி மீது மோதி...

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் : தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்து

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – மாவடி சந்தி பகுதியில் இன்றையதினம்
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் வீதியை விட்டு விலகி தூண் மற்றும்
வேலி மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

மூளாயிலிருந்து வந்த வான் மாவடி சந்தி ஊடாக சித்தங்கேணி நோக்கி
பயணிப்பதற்காக திரும்பியுள்ளது.

இதன்போது கட்டுப்படுத்த முடியாத வேகம் காரணமாக சித்தங்கேணி பக்கம்
திரும்பிய வாகனம் வலது பக்கத்துக்கு மாறி வீதியோரத்தில் இருந்த தூண் மற்றும்
வேலி மீது மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படாவிட்டாலும் தூண்,  வேலி மற்றும்
வான் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

விபத்து தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments