Monday, May 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைலண்டனில் பிரம்மாண்டமான தமிழ் விழா : உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பகிரங்க அழைப்பு

லண்டனில் பிரம்மாண்டமான தமிழ் விழா : உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பகிரங்க அழைப்பு

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொன் விழாவை முன்னிட்டு 14 ஆவது
தமிழ் மாநாட்டை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் லண் டனில் நடத்துவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத் திற்கு அருகில் உள்ள உலகத் தமிழர்
வரலாற்று வளாகத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29,  30 ஆம் திகதிகளில்
இம் மாநாடு நடத்தப் படவுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின்  ஒற்றுமைக்காகவும் ஐக்கியத்துக்காகவும் சட் டத்தரணி அடைக்கலமுத்து இளஞ்செழியன் தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமும் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் என ஏற் பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச பொதுச் செயலாளர் நாயகம்
துரை கணேசலிங்கம்,  தேசிய ஒருங்கிணைப்பாளரும் லண்டன் விழா
ஏற்பாட்டாளருமான சட்டத்தரணி அடைக்கலமுத்து இளஞ்செழியன் உள்ளிட்ட
குறித்த அமைப்பின் சர் வதேச கிளைகளின் பிரமுகர்கள்,  இலங்கை கிளையின்
தலைவர் அருணாசலம் சத்தியானந்தன்,  தேசிய அமைப்பாளர் தே.செந்தில் வேலவர் உள்ளிட்டோர் குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments