Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிருகோணமலையில் வீதியில் கிடந்த முதியவரின் சடலம்

திருகோணமலையில் வீதியில் கிடந்த முதியவரின் சடலம்

திருகோணமலை – திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீதியில் கிடந்த நபரை பாரத்த பொது மக்கள் இது தொடர்பில் உடனடியாக
பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து திருகோணமலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர் திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியைச் சேர்ந்த
73 வயதுடைய ஜோன் ஞானசேகரம் என உறவினர்களால் அடையாளம்
காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பாலையூற்று பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று
திரும்பி வருகையிலேயே உயிரிழந்திருக்கலாம் எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரவில்லை. குறித்த நபர்
விபத்தில் உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது
குறித்து தலைமைப் பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments