Tuesday, May 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமஹிந்தானந்த அளுத்கமகே இ நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்தானந்த அளுத்கமகே இ நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட ஆட்சேபனைகள் மீதான தீர்மானத்தை அடுத்த மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு இன்று காலை,  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே
மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால்
நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டிருந்தனர் .

கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலின் போது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு,
கேரம் போர்டுகள் மற்றும் டாம் போர்ட் ஆகியவற்றை இறக்குமதி செய்து
விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான
மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்மானம் இன்றையதினம் உத்தரவிடப்படும்
என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் வழக்கு மார்ச் மாதம் 25 ஆம் திகதி
அறிவிக்கப்படுமென நீதிபதி புத்திக சி. ராகல உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments