Saturday, May 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொழும்பின் புறநகர் பகுதியில் இளைஞன் கொடூரமாக அடித்துக் கொலை

கொழும்பின் புறநகர் பகுதியில் இளைஞன் கொடூரமாக அடித்துக் கொலை

கொழும்பின் புறநகர் பகுதியில் இரத்மலானை தர்மராம வீதிப் பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை தர்மராம வீதிப் பகுதியில் உள்ள ரயில் பாதைக்கு அருகில்
வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததை அடுத்து,  இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் கம்பங்களால் அந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 6 பேர்
இன்று கல்கிஸ்ஸ பொலிஸ் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

கொலையில் பலியானவர் இரத்மலானை ஸ்ரீ தர்மராம வீதியை சேர்ந்த 21 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments