மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் விடயத்தில் பாரத்தை அமரர் ஆறுமுகன் தொண்டமான் மீதுயிட்டு பயத்தை கைவிடுங்கள் நிச்சயமாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1இ700 ரூபாய் சம்பளம் கிடைக்குமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் .
நேற்று அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 60 ஆவது ஜனனதின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊடாக தாக்கல் செய்யபட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நமக்கு சார்பாகவே வழங்கப்படும் மக்கள் இன்று மக்கள் பாரிய கஷ்டத்தில் உள்ளார்கள் பெருந்தோட்ட நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்ள நாங்களும் தயார் நாட்டின் ஜனாதிபதி மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோர் எமக்கு முழு ஆதரவினை தருகின்றனர்.
பெருந்தோட்ட நிருவனங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் வழங்காவிட்டால் பெருந்தோட்ட நிறுவனங்களிடம் இருந்து பெருந்தோட்டங்களை பெற்று நடத்த கூடிய வேறு நிறுவனங்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஆகவே பெருந்தோட்ட நிறுவனத்தினர் கூறுவதை மக்கள் ஓரு போதும் நம்ப வேண்டாம் மக்கள் மத்தியில் பெருந்தோட்ட நிறுவனங்கள் பயத்தை ஏற்படுத்துகிறது கூட்டு ஒப்பந்தம் ஒரு அடிமைசாசனம் என நிறைய பேர் விமர்சித்தனர்.
வயதில் நான் சிறியவனாக இருந்தாலும் நான் இருக்கும் பதவி பல்வேறு ஜாம்பவான்கள் இருந்த இடம் மலையகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தால் அரசியல் என்ற போர்வையினை போத்தி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் சம்பளம் முதல் வீடமைப்பு திட்டம் வரை அனைத்து கட்சிகளை சார்ந்தவருக்கும் பெற்றுக் கொடுகின்றோம். மலையக பெருந்தோட்ட மக்களை நான் ஒருபோதும் விட்டுகொடுக்கவோ கைவிடவோ மாட்டேன் அது போன்ற குடும்பத்திலும் சரி தொழிற்சங்கத்திலும் சரி இருந்து வந்தவன் நான் இல்லை எனது தந்தை எனக்கு முறையான வரலாற்றை கற்று கொடுத்த காரணத்தினால் தான் மக்கள் மத்தியில் இன்று நான் சேவையாற்றி கொண்டுருக்கின்றேன். என்றார்.

