Tuesday, April 21, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்

ஈரான் ஆட்சியுடன் தொடர்புடைய இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள்  டெஹ்ரான் நகரின் மீது ஒரு பாரிய தாக்குதல் அலையைத் தொடங்கியுள்ளன.

‘கடந்த ஒரு நாளில்,  வான்வெளி மேலாதிக்கத்தை நிலைநாட்டவும்,  டெஹ்ரான்
நோக்கிய தாக்குதல் பாதையை வகுக்கவும் இஸ்ரேலிய விமானப்படை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, ‘ என்று இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகரில் இன்று காலை முதல் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள்
கேட்டதாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக ஈரானிய அரசாங்கத்தின் முக்கிய மையங்கள் மற்றும் இராணுவ நிலைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும்
இடையே நிலவி வரும் நேரடிப் போர் சூழல்,  இந்தத் தாக்குதல்களின் மூலம்
உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments