Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவைத்தியசாலையில் வைத்தியர் இல்லாததால் மயங்கிய மாணவனுக்கு ஏற்பட்ட நிலை

வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாததால் மயங்கிய மாணவனுக்கு ஏற்பட்ட நிலை

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நேற்று இளவாலைப் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன்
மயங்கி விழுந்துள்ளான்.

அருகிலுள்ள பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு
வைத்தியர் இல்லை எனவும் இரண்டு மணிக்கு பின்னரே வருகை தருவார் என
வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவனின் நிலை கருதி தாதியர் ஒருவரை முதலுதவி செய்யுமாறு ஆசிரியர்
ஒருவர் கேட்ட நிலையில் மாணவனுக்கு ஏதாவது நடந்தால் தமக்கு
பொறுப்பாயிடும் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

மாணவனை அனுப்புவதற்கு அம்பியுலன்ஸ் வண்டி ஏதாவது ஒழுங்கு செய்து
தாருங்கள் என கேட்ட நிலையில் அதுவும் தம்மிடம் இல்லை வேறு அம்பியுலன்ஸ்
வண்டிகளும் இங்கு வராத என தெரிவித்துள்ளனர்

வேறு வழி இன்றி மயக்கமடைந்த மாணவனை தெல்லிப்பழை ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments