யாழ்ப்பாணத்தில் பால் குடித்துவிட்டு உறங்கிய மூன்று மாதங்கள் நிரம்பிய
பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தில்
ஆழ்த்தியுள்ளது.
கோப்பாய் மத்தி, அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த குழந்தையே
இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையின் தாயார் நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணியளவில்
பாலூட்டியுள்ளார்.
அதன்பின்னர் காலை 6 மணியளவில் குழந்தையை பார்த்தவேளை மூக்கினால் பால் வெளிவந்து குழந்தை விறைத்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதன்போது குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குறித்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா காரணமாக குழந்தை உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

