யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள்
உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்
தெரிவித்தார்.
குருநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ
இடத்திற்கு விரைந்த பொலிஸார் 06 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 06 பேரிடமிருந்தும் 60 போதை மாத்திரைகளை
பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 06 பேரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளில் இரு இளைஞர்கள் மருந்து விற்பனை பிரதிநிதிகள் என
தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை
நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

