ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த
தடை உத்தரவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சாமரி வீரசூரியவிடம் ஒப்படைக்கப்படுமென மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
அதனையடுத்து, குறித்த வழக்கு நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜயமுதித ஜயசூரிய நீதிமன்றில் கோரிக்கை விடுத்து இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரினார்.
இதன்படி, ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிபதி வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், தற்போது பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை அன்றைய தினம் வரை நீடிப்பதாகவும் உத்தரவிட்டார்.

