Thursday, May 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபிரதமர் மோடி - முதல்வர் விஜய் சந்திப்பு

பிரதமர் மோடி – முதல்வர் விஜய் சந்திப்பு

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை,  தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்
இன்று (27) சந்தித்துள்ளனர்.

புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியை முதல்வர்
விஜய் சந்தித்தார்.

ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமருடனான
முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான
நிதிக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் விஜய்
வழங்கியுள்ளார்.

இரு நாள் அரசுமுறைப் பயணமாக டில்லிக்கு சென்ற முதல்வர் விஜய்க்கு,
டில்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து,  தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்குச் சென்ற விஜய்க்கு,  டில்லி திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழ்நாடு பொலிஸ் சிறப்புப் படையணி சார்பில் சம்பிரதாயப்படி அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments