Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகோட்டாபயவின் ரிட் மனு இன்றும் விசாரணைக்கு

கோட்டாபயவின் ரிட் மனு இன்றும் விசாரணைக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்போது தம்மை கைது செய்வதைத் தடுக்க கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, இன்று (24) இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர்
சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில்
மனு விசாரணைக்கு வந்தது.

மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி
ரொமேஷ் டி சில்வா தொடர்ந்து வாதங்களை முன்வைத்து வருகிறார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ‘
ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஆஜராகியுள்ளார்.

இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர்,  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன
மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments