பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள
வழக்கை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு
கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (07) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பும்
நடைமுறைக்கு அமைய, வழக்கில் உள்ள இரண்டு இந்திய தேசிய சாட்சிகளுக்கு
அழைப்பாணைகள் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, வழக்கை நவம்பர் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

