Wednesday, July 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைடெங்குவால் 40 கைதிகள் உயிரிழந்தனரா? மறுத்த அமைச்சர்

டெங்குவால் 40 கைதிகள் உயிரிழந்தனரா? மறுத்த அமைச்சர்

நீர்கொழும்பு சிறையில் டெங்கு காய்ச்சலால் 40 கைதிகள் உயிரிழந்ததாக
வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (07) கருத்து வெளியிட்ட அவர்,  சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு எந்தவித உண்மையும் இல்லை எனக் கூறினார்.

’40 பேர் உயிரிழந்திருந்தால் அதற்கான ஆதாரங்கள் இருந்திருக்கும். தற்போது
அவ்வாறான எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை. காய்ச்சலால் பாதிக்கப்படும்
ஒவ்வொரு கைதிக்கும் தேவையான வைத்திய சிகிச்சை வழங்கப்பட்டு
வருகின்றது’ என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை வழங்க இயலாத நோயாளிகள் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments