Monday, July 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபலத்த காற்று வீசும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பலத்த காற்று வீசும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் தீவிரமான தென்மேற்கு பருவநிலை காரணமாக,
மத்திய,  சப்ரகமுவ,  வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,
மொனராகலை,  ஹம்பாந்தோட்டை,  திருகோணமலை மற்றும் மன்னார்
மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில்
பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை,  மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்
வரையிலான கடற்பரப்புகளுக்கும்,  சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக
காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்புகளுக்கும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும்,  கடல் பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன்
செயற்படுமாறும்,  வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்கால அறிவித்தல்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments