Friday, July 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில்
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 28 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

2026 ஜூன் 1 முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் கடல் பிராந்தியங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது,
சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்திய நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன்,  12 டிங்கி படகுகள்,  4 உழவு இயந்திரங்கள் மற்றும்
ஒரு வேன் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன.

திருகோணமலை மாவடி ஓடை, கதிரவேளி,  நயாறு, பிளாக் முனை, யாழ்ப்பாணம்
வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு ஆகிய கடற்கரை மற்றும் கடல்சார் பகுதிகளில் கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள்
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு,  யாழ்ப்பாணம்,  கொட்பே,
வாழைச்சேனை ஆகிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள
அலுவலகங்களுக்கும்,  மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளன

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments