புலத்சிங்கள, உடுகலகந்த அமரகெதர பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து
இன்று (7) காலை இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலை ஒன்றிற்காக ஊழியர்களை ஏற்றி உடுகலகந்த பகுதியில் இருந்து
சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களில் 6 பேர் ஹொரணை மாவட்டவைத்தியசாலையிலும்,
8 பேர் புலத்சிங்கள பிரதேச வைத்தியசாலையிலும்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள்
அடங்குவதுடன், சாரதி உட்பட மேலும் இரு ஆண்கள் காயமடைந்துள்ளதாக
குறிப்பிடப்படுகின்றது.
காயமடைந்தவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.

