Friday, August 14, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம்இ இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை
வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான்தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள
செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில்
இன்று (14.08.2026) இந் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி,  அக வணக்கம் செலுத்தி மலர்தூவி
அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments