Friday, August 14, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅம்பாலாந்தோட்டையில் மீட்கப்பட்ட பௌதிகவியல்வினாத்தாள்கள்

அம்பாலாந்தோட்டையில் மீட்கப்பட்ட பௌதிகவியல்வினாத்தாள்கள்

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின்
போது,  அம்பாலாந்தோட்டையிலுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு மையமாகச்
செயற்படும் பாடசாலையொன்றில் எதிர்பாராத சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் நடைபெறவுள்ள இசை,  நடனம் மற்றும் விவசாய அறிவியல்
ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பெட்டியைத் திறந்தபோது,  அதற்குள்
நாளை (14) நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் பாகத்திற்குரிய
06 வினாத்தாள் பொதிகள் தவறுதலாக இடம்பெற்றிருந்தமை
கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
இந்திகா குமாரி,  கண்டெடுக்கப்பட்ட வினாத்தாள் பொதிகள் எதுவுமே
பிரிக்கப்படவோ அல்லது அவசியமின்றி வெளிப்படுத்தப்படவோ இல்லை என்றும்,
வினாத்தாள்களின் இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு முழுமையாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும்,  வினாத்தாள்கள் எவ்வாறு தவறான பெட்டியில் பொதி செய்யப்பட்டு
அனுப்பப்பட்டன என்பது குறித்தும்,  இதில் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்தும்
கல்வி அமைச்சு உடனடி சிறப்பு விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments