Wednesday, August 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும்இ மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது
மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன்,
அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நீர்கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான
கடலோரத்தை ஒட்டிய கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 – 3.0 மீற்றர்
வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக அவ்அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது.

கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments