Wednesday, September 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகைவிலங்குடன் தப்பிய கைதி சிக்கினார்

கைவிலங்குடன் தப்பிய கைதி சிக்கினார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவர் இளவாலை பொலிஸாரால்
மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட
குறித்த கைதி,  திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில்,  கடந்த 30ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் அவர் தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்ற கைதி இளவாலை பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸ்
புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து,  அவரைத் தேடும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது,  குறித்த கைதி தனது மனைவியின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு
மேற்கொண்டதை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் அவரது
இருப்பிடத்தை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்,  நேற்று மாலை தனது மனைவியை சந்திப்பதற்காக வந்தபோது
இளவாலை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments