Thursday, September 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுளியங்கொட்டை தொண்டையில் சிக்கி மரணம்

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி மரணம்

புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் கலகஹா,  நில்லம்ப – குருக்கலே பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அப்பிரதேசத்தில் வசித்து வந்த,  குடும்பத்தின் இளைய
பிள்ளையான சனுதி லக்ஷானி என்ற 07 வயதுடைய சிறுமியாவார்.

நேற்று (02) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த
போதுஇ பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையில் இருந்த சிறிதளவு
புளியம்பழத்தை எடுத்து உண்ண சிறுமி முயற்சித்துள்ளார்.

இதன்போது புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்ததும்,  வீட்டில் இருந்த தாய் உட்பட உறவினர்கள் சிறுமியைக் காப்பாற்றும் நோக்கில் லொறி ஒன்றின் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகஹா பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments