Saturday, September 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநானுஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நானுஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நுவரெலியா – நானுஓயாஇ கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள
ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள்
திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன்
நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா கிரிகோரி வாவியிலிருந்து வெளியேறி,  கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள ஆற்றில்
குளிக்கச் சென்றபோதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா
மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments