Friday, October 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிராக போராட்டம்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிராக போராட்டம்

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும்,  அச்சிலையை
மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு வலியுறுத்தியும் நல்லூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் போராட்டம் இன்று (02) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  நேற்று முன்தினம் முதல் நல்லூரில் தியாக தீபம் ஏற்றி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  குறித்த போராட்டம் பேரணியாக இன்று மாலை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்லூரில் இருந்து பேரணியாகச் சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள்
சபையின் அலுவலகத்தில் மகஜர் ஒன்றைக் கையளித்த பின்னர் போராட்டம்
நிறைவடையவுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments