முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) காலை மஹிந்த ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலை ஒன்றில் இவ்வாறு
அனுமதிக்கப்பட்டதுடன், அவர் சிறிது நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் சுகாதார நிலைமை குறித்து
சில சாதாரண மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த மருத்துவ பரிசோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அவர் தற்போது
சாதாரண சிகிச்சை பிரிவின் கீழ் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

