தற்போது பெய்து வரும் மழைக்காலத்தால் டெங்கு காய்ச்சல் மீண்டும்
அதிகரிக்கக்கூடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சங்கத்தின்ஊடகப் பேச்சாளர்
மருத்துவர் சமில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவுவதை தடுப்பதில் கவனம்
செலுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், இது பூச்சியியல்
தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், வளாகங்களைச்
சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், டெங்கு
காய்ச்சலை நீண்டகாலம் ஒழிப்பதற்கு இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை
என்றும் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

