Tuesday, October 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில்,  நீதிமன்றம்
உத்தரவிட்ட முழுமையான இழப்பீட்டைச் செலுத்தத் தவறிய முன்னாள்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும்
பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட் துடன்,  குறித்த நால்வரும்
வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்துள்ளது.

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி
செய்யப்பட்டதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாகத் தீர்ப்பளித்த
உயர் நீதிமன்றம்இ இவ்வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த ஐவருக்கும்
கடந்த மார்ச் மாதம் இழப்பீடு செலுத்த உத்தரவிட்டிருந்தது.

இதன்படி,  முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபா
இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதில் 20 மில்லியன் ரூபா
ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டை உரிய முறையில் செலுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு
இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டி தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த
பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான மூவரடங்கிய
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments