Tuesday, October 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரத்தினபுரி மாவட்டத்தின் ஆறு பிரதேசங்களுக்கு 3ஆம் கட்டத்தின் கீழ் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் ஆறு பிரதேசங்களுக்கு 3ஆம் கட்டத்தின் கீழ் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு
3ஆம் கட்டத்தின் கீழ் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  இரத்தினபுரி,  அயகம,  பெல்மதுல்ல,  குருவிட்ட,  எலபாத்த மற்றும்
ஓபநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழையால் மண்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால்,
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும்,
அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும்
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments