Wednesday, October 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசஜித்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு

சஜித்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் விடுத்த விசேட அழைப்பின் பேரில்இ
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று யாழ்ப்பாணத்திலுள்ள
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பாடசாலை பஸ் வழங்கும் வேலைத்திட்டங்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வேளையிலயே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் தற்போதைய சமூக,  பொருளாதார, அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நீண்டநேரம் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments