Monday, May 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகால நிலை குறித்து எச்சரிக்கை

கால நிலை குறித்து எச்சரிக்கை

தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாகஇ இலங்கையில் நிலவும் காற்றுடன் கூடிய கால நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனவும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு,  வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை,மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எம்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கையின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments