நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறி வகைகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக மழையுடன் கூடிய வானிலை காரணமாக மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கனமழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டுவர முடியாமல்இ மழையால் பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (18) நுவரெலியா நகரில் மத்திய சந்தையில் ஒரு கிலோகிராம் நிறையுடைய கறிமிளகாய் 750 ரூபாய், கோவா- 350 ரூபாய், கரட் 400 ரூபாய், லீக்ஸ் 420 ரூபாய், முள்ளங்கி 160 ரூபாய், இலையுடைய பீட்ரூட் 400 ரூபாய்இ இலையில்லா பீட்ரூட் 480 ரூபாய், உருளைக்கிழங்கு 460 ரூபாய்,
கத்திரிக்காய் 360 ரூபாய் என மரக்கறி வகைகளின் விலைகள் அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
அதேவேளைஇ, ஒரு கிலோகிராம் கொத்தமல்லி இலையின் விலை 450 ரூபாய், ப்ரக்கோலி – 3900 ரூபாய், கோலிப்ளவர் 1600 ரூபாய் என்றவாறு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மழையால் பயிர்கள் அழிந்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்துள்ளதுடன், குறைந்த விலையில் காய்கறிகளை கொண்டு வந்தாலும், பொருளாதார மையங்களில் உரிய விலை கிடைப்பதில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.

