Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

ஜனதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

பொலிஸ் மாஅதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பின்
சட்ட விடயங்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்துஇ எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள்
அமைச்சரவையின் பதிலை வெளியிட ஜனாதிபதி தலைமையில் இன்று(24) கூடிய
அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

தேசபந்து தென்னக்கோனுக்கு பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற உயர் நீதிமன்றம் இடைகால தடையை இன்று விதித்திருந்தது. அத்துடன்,  அரசின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பிரஜைகள் ஆலோசனைக் குழுக்கள் செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம்
பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளர் விடுத்த வர்த்தமானியை அமுலாக்க இதன்மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments