கெஹேலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்படும் என இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரியிருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
இந்நிலையில்இ தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

