Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுல்லைத்தீவில் மாட்டு காவலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் மாட்டு காவலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில்
மாட்டு காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டிலில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய கந்தையா மோகனதாஸ் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு
பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

இதன்போது,  உயிரிழந்த நபர் மாட்டு காவலுக்காக சென்றவர் எனவும் அந்த காவல் கொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த வேளை அவர் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்

இந்நிலையில்இ சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments