தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று
அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்றுள்ளது. கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கு முன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது. பனையூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், கொடியேற்றி வைத்த விஜய், கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலை வெளியிட்டார்.
‘தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது’ எனத் தொடங்கும் கட்சியின் கொள்கை பாடலை விஜய் வெளியிட்டார்.

