Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை35 நாடுகளுக்கு இலவச விசா

35 நாடுகளுக்கு இலவச விசா

35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்இ ஐக்கிய இராச்சியம் , ஜேர்மனி , நெதர்லாந்து , பெல்ஜியம்,  ஸ்பெயின், அவுஸ்திரேலியா,  டென்மார்க்,  போலந்து , கஸகஸ்தான் , சவுதி அரேபியா,  ஐக்கிய அரபு இராச்சியம் , நேபாளம் , சீனா , இந்தியா , இந்தோனேசியா,  ரஷ்யா,  தாய்லாந்து,  மலேசியா,  ஜப்பான்,  பிரான்ஸ் , அமெரிக்கா , கனடா, செக்குடியரசு,  இத்தாலி , சுவிட்சர்லாந்து,  ஆஸ்திரியா ,
இஸ்ரேல்,  பெலாரஸ்,  ஈரான் , சுவீடன்,  தென் கொரியா,  கட்டார், ஓமான் , பஹ்ரைன்,  நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments