Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபணிப்பகிஷ்கரிப்பில் மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள்

பணிப்பகிஷ்கரிப்பில் மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள்

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட அநாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக இன்றைய தினம் அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரனைகள் பிறிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு சென்ற சட்டத்தரணிகள் , எவ்வித வழக்கு விசாரணைகளுக்கும் சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

அதேவேளை,  மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினால் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளவுள்ளதோடு , ஊடக சந்திப்பும் மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி
இ.கயஸ்பெல்டானோ தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments