Saturday, August 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபோராட்டத்தில் குதித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள்

போராட்டத்தில் குதித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள்

மட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்படுவதாக தெரிவித்து வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று போதனா வைத்தியசாலையின் நிர்வாக பணிமனை முன்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் சுமார் அரை மணி நேரம் தங்களது எதிர்ப்பினை பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் வெளியிட்டிருந்தனர்.

இதன்போது ‘ வைத்தியசாலை நிர்வாகம் தாதியர் உரிமையை பாதுகாக்க வேண்டும்,  வியாபார நோக்கில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்,  வதந்திகளை நம்பாதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments