Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய முயற்சி

மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய முயற்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி
சதித்திட்டம் தீட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் குடியிருப்புகளையும் பாதுகாப்பையும் பறித்து இந்த சதி முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உண்மையை வெளிப்படுத்துமாறு அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments