Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் படகுடன் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு

யாழில் படகுடன் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில்
கடற்றொழிலாளர் ஒருவர் படகொன்றில் தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் இன்று(23) காலை வரை திரும்பி வரவில்லை.

இதனையடுத்து மாயமான கடற்றொழிலாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஊரவர்கள்,  அவரது சடலமானது இன்று காலை பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments