Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரை

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரை

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பிரேரணையை தயாரித்து
சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளார்

இன்று ஜனாதிபதி செயலகத்தில் மாகாண ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதார மற்றும் கல்வி சேவைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு சாதகமான தீர்வுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்தும் வகையில் சிறந்த சேவையை வழங்க மாகாண சபைகள் செயற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் மாகாண சபைகளினால் சாத்தியமான அனைத்து பொருளாதார மற்றும் சமூக தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

புதிய அரசியல் கலாசாரத்தை ஆரம்பிப்பதற்கு கிடைத்த ஆணையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி,  மக்களின் நம்பிக்கையை குலைக்காத செயற்பாடுகள் குறித்தும் வலியுறுத்தினார்.

அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதில் முன்னைய மோசமான முன்னுதாரணங்களை அகற்றி தரமான அரச சேவைக்கு தம்மை அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆளுநர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்போது வடக்கு கிழக்கு காணிகள் மற்றும் மாகாண சபை நிதியின் பயன்பாடு தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் கந்தளாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பிலும் கவனம்
செலுத்தப்பட்டது.

இதில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் சேதநாயகன்,  சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன,  கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ,ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர,  தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர,  மத்திய மாகாண ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன்,  வடமத்திய மாகாண ஆளுநர் வசந்தா குமாரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments