Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவைகள் இன்று முதல்

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவைகள் இன்று முதல்

வடக்கு ரயில் மார்க்கத்தின் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகள்
இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையில் இன்று அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

நாளை (29) காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments