Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபதுளையில் பேருந்து விபத்து: மூவர் உயிரிழப்பு

பதுளையில் பேருந்து விபத்து: மூவர் உயிரிழப்பு

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று பதுளை துன்ஹிந்த பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இடம்பெற்ற போதுஇ குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும்,
ஏனையவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments