Thursday, October 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சியில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வும்

கிளிநொச்சியில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வும்

சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும்,  மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.

கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டு வருகின்றது.

2024 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சி பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

மாவீரர்களின் பெற்றோரால் பொது உருவப்படம் ஏந்திவரப்பட்டது.

எழுச்சி கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன்,  வீதி வளைவும் அமைக்கப்பட்டு பெற்றோர் அஞ்சலி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டதுடன்இ மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

இதன்போது மக்கள் உணர்வு பூர்வமாக அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவீரர் பெற்றோரை கெளரவிக்கும் வகையில் உலருணவுப் பொதியும்,
மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments