Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்

ஜனாதிபதி அவர்களின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக 2024.11.28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும்,  கடற்றொழில்,  நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன அவர்களினால் கடற்றொழில்,  நீரியல் மற்றும் கடல் வளங்கள் கெளரவ அமைச்சர் அவர்களுக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதியிடப்பட்ட 2024.11.28 ஆம் திகதிய கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments