Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஎரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு

எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய,  311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  அதன் புதிய விலை 309 ரூபாவாகும்.

283 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 188 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை,  ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையிலும்,  சுப்பர் டீசலின் விலையிலும் எவ்விதமான மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் தற்போதைய விலை – 371 ரூபா

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் தற்போதைய விலை – 313 ரூபா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments