அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது.
இதன் போது அன்ரன் பாலசிங்கத்தின் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொது மக்கள்
எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

